Newsletter Subscribe

Blog & Comments

Arriving Soon

Authors

மூன்று: Moondru (Tamil Edition)

by ரெஜோவாசன் Rejovasan on 2018-12-23

அவன், அவள் மூன்று குறிப்புகள்:

அவன் இரவுகளில் நிழல் தொலைத்தவன். அவள் மின்மினிகளின் ஹைக்கூ. அவன் சிரிக்க மறந்தவன். அவள் இதழ்கள் புன்னகையின் முகவரி. அவன் இசை கேட்பவன். அவள் பாடல் வரிகளின் பைத்தியம். அவன் பூமிவாசி. அவள் நிலாவுக்குச் சொந்தக்காரி. காதலின் பால்வீதியில் ஒருவரையொருவர் சந்திக்க நேர்கையில் வேறென்ன நடக்கும். சில பட்டாம்பூச்சிகள் பறக்கும். நிலா தேய்வது மறக்கும். மழையில் குடை கணக்கும். செல்கள் ஒவ்வொன்றும் சிறகுகள் முளைத்து ஒன்பதாவது மேகத்தில் மிதக்கும். காதல், கூடல், ஊடல், கண்ணீர், பின் இன்னும் நிறைய காதல். வேறென்ன புதிதாக இருந்து விடப்போகிறது இன்னொரு காதல் கதையில்.

இந்தக் கதையிலும் அவனும் அவளும் சந்திக்கிறார்கள். காதலிக்கிறார்கள். கல்யாணமும் செய்து கொள்கிறார்கள். அவள் அவனின் யட்சி. ஆன்மாவின் விடுதலை. அவனுக்கு அவ்வளவு காதல், அவளைக் கொலை செய்யத் துணியும் அளவு. இடையில் இருந்தும் இல்லாமலும் இன்னொரு பெண், எக்ஸ்டஸி, எல்.எஸ்.டி, ஸ்கீஸோப்ரினியா, கூடக் கொஞ்சம் ஏலியன்கள். சர்வம் சூன்யம்.

மூன்றாவது கதையின் அவனுக்கு காதல் பற்றிய அபிப்ராயம் சுலபமானது. அது மதுவைப் போன்றது. பணம் கொடுத்ததும் பரிமாறப்படுவது. சில நிமிட போதை. இரவு கலைந்ததும் கூடவே போய்விடுவது. அவளுக்குக் காதல் எல்லாமுமாக இருந்தது. காதல் மது என்றால், அதில் எப்பொழுதும் மயங்கிக் கிடக்கத் தயாராக இருந்தாள். விடிந்தால் கலைந்து விடும் என்றால் விடியலைக் கொன்றுவிடத் தயங்காமல் இருந்தாள். ஒருவன் கவிதைகளாலேயே தன் காதலியை அர்ச்சிக்கிறான். பார்க்கும் இடங்களெல்லாம் அவனுக்குக் கவிதையாகத் தெரிகிறது. அவன் காதலியாகத் தெரிகிறது. பொய்களை உண்மையாக்குகிறான். இன்னொருவன் தன் காதலியை அடைய எளியவழி இருந்தும், வலிகளைச் சுமந்து திரிகிறான். வியர்வைச் ச

Advertisements